அதிமுக முன்னாள் அமைச்சரை தொடர்ந்து, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் மருத்துமனையில் அனுமதி.!!
admk alliance candidate sridhar vandayar corona positive
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை அதி வேகத்தில் பரவிவருகிறது. ஆனாலும்கூட சிலர் எந்த கவலையுமின்றி அரசு உத்தரவுகளை மதிக்காமல், கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6 ஆயிரத்து 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவரும், அதிமுக கூட்டணியின் கும்பகோணம் தொகுதி வேட்பாளருமான ஸ்ரீதர் வாண்டையாருக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம் எஸ் எம் ஆனந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
admk alliance candidate sridhar vandayar corona positive