அந்த சேர்ல உட்கார தகுதி இருக்கா? தளபதிக்கு அர்த்தம் தெரியும்ல? கொளுத்தி போட்ட நடிகர் விஜய்!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பொதுவாக இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் குட்டி ஸ்டோரி சொல்லுவதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில் லியோ படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடைபெறாததால் வெற்றி விழாவில் தனது குட்டி ஸ்டோரியை கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற விழா மேடையில் பேசிய நடிகர் விஜய் "ஒரு குட்டி பையன் ஆசையா அவங்க அப்பா சட்டையை எடுத்து போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச் எடுத்து கட்டிக்குவான். அப்பாவோட சேர்ல ஏறி உட்கார்ந்துக்குவான்.

அந்த சட்ட அவனுக்கு செட்டே ஆகாது. தொளதொளன்னு இருக்கும். வாட்ச் கையிலேயே நிக்காது. அந்த சேர்ல உட்காரலாமா? வேணாமா? தகுதி இருக்கா? இல்லையா? அதெல்லாம் அவனுக்கு தெரியாது. அப்பா சட்டை, அப்பா மாதிரி ஆகணும் கனவு, அதில் என்ன தவறு.

அதனால பெருசா கனவு காணலாம். ஒருத்தரும் ஒன்னும் பண்ண முடியாது. புரட்சித் தலைவர் ஒருவர் தான், நடிகர் திலகம் ஒருவர் தான், உலக நாயகன் ஒருவர் தான், சூப்பர் ஸ்டார் ஒருவர்தான், புரட்சி கலைஞர் ஒருவர்தான், தல என்றால் அனைவருக்கும் ஒருவர் தான். தளபதிக்கு அர்த்தம் தெரியும்ல, மன்னர் ஆணையிட்டால் தளபதி செய்து முடிப்பார். நீங்கள் தான் மன்னர்கள், நான் உங்கள் தளபதி" என லியோ திரைப்பட வெற்றி விழா மேடையில் மறைமுகமாக அரசியல் பேசியுள்ளார் நடிகர் விஜய். விஜயின் இந்த பேச்சால் சமூக வலைதளத்தில் பெரும் விவாதமே நடைபெற்ற வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijays indirect politics speech Create controversy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->