சோலி முடிஞ்சுது! டெல்லியை கைப்பற்றும் பாஜக! கெஜ்ரிவாலின் காலை வாரிய 7 எம்எல்ஏ,க்கள்!  - Seithipunal
Seithipunal


கெஜ்ரிவால் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி, ஆம் ஆத்மியில் இருந்து 7 எம்.எல்.ஏ.-க்கள் விலகி உள்ளனர்.

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.எல்.ஏ.-க்கள் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளது டெல்லி அரசசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

பூபிந்திர் சிங் சூன், நரேஷ் குமார், ரோகித் குமார, ராஜேஷ் ரிஷி, மதன் லான், பவன் ஷர்மா மற்றும் பாவனா கவுட்  இவர்கள் அனைவருக்குமே இந்த முறை தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. 

இதனால் அதிருப்தியில் இருந்த நிலையில், இன்று தங்களை பாஜகவில் இழந்து கொண்டுள்ளனர். மேலும், "நேர்மையான அரசியல் என்ற அடிப்படை கொள்கையை ஆம் ஆத்மி கைவிட்டுள்ளது. கெஜ்ரிவால் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்" என்றும் விலக்கியதற்கான விளக்கமாக தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, டெல்லியை பாஜக இந்தமுறை கைப்பற்றும் என்று சொல்லப்பட்ட நிலையில், அதற்க்கு ஏற்றால் போல் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதாகவும், இது தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் நாளையே பாஜகவில் இணைவார்கள் என்றும், இணைந்த உடன் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AAP MLA BJP Kejriwal Delhi assembly elections 


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->