குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி யாருக்கு ஆதரவு.? இன்று ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து ஆம் ஆத்மி கட்சி இன்று ஆலோசனை மேற்கொள்கிறது.

குடியரசுத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். அவர்கள் மாநிலம் தோறும் சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டுகின்றனர். 

இந்த நிலையில், வருகின்ற 18-ந்தேதி நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் விவகார குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர். இன்று நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், குடியரசு தலைவர் தேர்தலில் தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை ஆம் ஆத்மி கட்சி அறிவிக்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aam Aadmi party discussion about president candidate support


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->