ஆல் ஏரியாவிலும் கிங்; தமிழக முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களின் ஒரே நாளில் ஃபாலோயர்கள் அதிகரிப்பு..!
A one day spike in followers across the official social media pages of the Tamil Nadu Chief Ministers Office
தமிழகத்தின் புதிய முதல்வராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், தமிழக முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் அதிக ஃபாலோவர்களை பெற்று புதிய மைல்கற்களை எட்டி வருகிறது.
தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கமான @cmotamilnadu கடந்த 09-ஆம் தேதி வரை 04 லட்சம் ஃபாலோவர்ஸ்களுடன் இயங்கி வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிறுள்ளார். அவர் பதவியேற்ற அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே, அந்தப் பக்கத்தைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை (ஒரு மில்லியன்) தொட்டுள்ளது.
குறிப்பாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் திரண்டது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, அரசுத் தரப்பில் நிர்வகிக்கப்படும் ஒரு சமூக வலைதளப் பக்கம், மிகக் குறுகிய காலத்தில், ஒரே நாளில் 06 லட்சம் புதிய பின்தொடர்பாளர்களை பெற்றுள்ளமை ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசின் மீதான இளைஞர்களின் எதிர்பார்ப்பையும், டிஜிட்டல் தளங்களில் நிலவும் ஆர்வத்தையும் இது பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி, 'எக்ஸ்' மற்றும் 'ஃபேஸ்புக்' ஆகிய தளங்களிலும் முதல்வர் அலுவலக பக்கங்களை பின்தொடர்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
English Summary
A one day spike in followers across the official social media pages of the Tamil Nadu Chief Ministers Office