திமுக கள ஆய்வுக்குழு அறிக்கையில் சேகர்பாபு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு? டென்ஷனில் ஸ்டாலின்! கட்சிக்குள் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய திமுக தலைமை அமைத்த கள ஆய்வுக்குழு தனது விரிவான அறிக்கையை அறிவாலயத்தில் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிக்கையில், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை மண்டலத்தின் முக்கிய நிர்வாகியுமான சேகர்பாபு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவது திமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த அறிக்கையில், சேகர்பாபு அமைச்சராக இருந்த காலத்தில் எடுத்த சில ஒருதலைப்பட்ச முடிவுகள் அடிமட்ட நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கோயில் அறங்காவலர் குழுக்களில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களில் பாரபட்சம் காட்டப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்த திமுக நிர்வாகிகள் மற்றும் பாரம்பரிய கட்சித் தொண்டர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், அதிமுகவில் இருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்தவர்களுக்கும், தனக்கு நெருக்கமானவர்களுக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்ததாகவும், அந்த அதிருப்தி தேர்தல் நேரத்தில் கட்சிக்கு எதிரான உள்ளடி நடவடிக்கைகளாக மாறி, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுகவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்ததாகவும் கள ஆய்வுக்குழு குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்கொண்ட தோல்விக்கும் சேகர்பாபுவின் தேர்தல் பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகளே காரணம் என கட்சிக்குள் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்திருந்தன. தேர்தல் பணிகளில் அவர் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் சில நிர்வாகிகள் மத்தியில் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், கள ஆய்வுக்குழு அறிக்கையில் சேகர்பாபு பெயர் இடம்பெற்றிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள், அவர் மீது கட்சித் தலைமையால் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து திமுக தலைமையிலோ, சேகர்பாபு தரப்பிலோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A barrage of allegations against Sekar Babu in the DMK field inspection team's report Stalin is tense A stir within the party


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->