அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஆல் உச்சகட்ட பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒற்றை தலைமை பூதாகரமாக வெடித்து உள்ள நிலையில், தலைமையை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். ஓ பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமையே  தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதனால் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் தங்களுடைய ஆதரவாளர்களுடன் 8-வது நாளாக தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே ஓ பன்னீர்செல்வத்தை அதிமுக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், தம்பிதுரை, செல்லூர் ராஜு ஆகியோர் எடப்பாடிபழனிசாமியையும் ஓ. பன்னீர்செல்வத்தையும் தனித் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆனால் ஒற்றைத் தலைமை விவகாரத்தில்  ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. 

ஒற்றைத் தலைமை தேவையில்லை என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி அசைந்து கொடுக்காததால், இறுதிக் கட்டமாக பொதுக்குழுவை வைக்கும்படி எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதற்கு எடப்பாடி பழனிசாமி இடம் இருந்து பதில் வரவில்லை. 

இதனிடையே, அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரிய வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதிய கடிதத்தை நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. 8-வது நாளாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இன்றும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8th day meeting for ops and eps


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->