700 ஆண்டுகள் பழமையான சிலையும் அதை மீட்ட பின்னணியும்., மாஸ் காட்டிய பொன்மாணிக்கவேல்! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைகுறிச்சியில் குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி எனும் அம்மன் கோவில் உள்ளது. பாண்டியர் காலத்தில் 700 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோவிலில் உற்சவ மூர்த்தியாக நடராஜர் சிலையை வைத்து பூஜைகள் நடந்து வந்தது.

இந்த கோவிலில் இருந்த நடராஜர் , சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், திருவில்லி விநாயகர் சிலைகளை கடந்த 1982 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி கோவிலின் இரும்புக்கதவை உடைத்து கொள்ளையடித்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு 1984 ஆம் ஆண்டுவரை வழக்கை விசாரித்தும் எந்த துப்பு துலக்க இயலாமல் வழக்கை காவல்துறை மூடிவிட்டது .

இதையடுத்து, இந்த சிலை திருட்டு வழக்கை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தூசி தட்டி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தனர். வரலாற்று நூல்கள், பட்டயங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் அந்த கோவிலில் 1958ல் எடுக்கப்பட்ட புகைபடங்களை எல்லாம் வைத்து சிலைகளை கண்டுபிடிக்கும் பணிகளை தீவிரப்படுத்தினர். 

இங்கு களவாடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியா நாட்டின் அடிலைடில் உள்ள ஆர்ட் கேலரி ஆப் சவுத் ஆஸ்திரேலியா அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் இந்த  நடராஜர் சிலை இந்தியாவில் தமிழகத்தின் நெல்லை மாவட்ட கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலிருந்து திருடப்பட்ட சிலை என்பதை தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்து உறுதிபடுத்திய சான்று கடிதத்துடன் ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்துக்கு சிலைகடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேல் அனுப்பி வைத்தார். 

இதையடுத்து நடராஜர் சிலையை ஒப்படைக்க அருங்காட்சியக நிர்வாகம் ஒப்புக் கொண்டது, அதன்படி ஆஸ்திரேலியாவில் இருந்து டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலை, சிலைகடத்தல் தடுப்பு சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

மேலும், இது குறித்து கருத்து தெரிவித்த பொன் மாணிக்கவேல், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒத்துழைப்பு இல்லை என்றால்இந்த சிலை மீண்டும் இந்தியாவுக்கு வந்து சேர்ந்திருக்காது எனவும் மீதமுள்ள சிலைகளையும் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பூஜைக்காக குலசேகரமுடையார் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.

தனிப்படையை வழி நடத்தி சென்று 700 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க நடராஜர் சிலையை ஆஸ்திரேலியாவிலிருந்து சாமர்த்தியமாக மீட்டு சாதித்து காட்டிய, பொன்மாணிக்கவேலுவின் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு புலனாய்வு குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

700 statue identified by pon manickavel


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal