அரசுப் பணிகளில் தமிழ் வழிக் கல்வியினருக்கு 20% முன்னுரிமை! மசோதாவுக்கு பச்சைக்கொடி காட்டிய ஆளுநர்!
20 percentage priority in government jobs for those educated in the Tamil medium Governor gives the green signal to the bill
தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி? No, அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதன்படி, நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ் வழியில் முழுமையாக கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத முன்னுரிமை வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், ஏற்கனவே அரசு பணியில் இருப்பவர்களும் தமிழ் வழிக் கல்வி என்ற தகுதியை மட்டும் பயன்படுத்தி மீண்டும் முன்னுரிமை பெறுவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்த நிலையில், முதல் வகுப்பு முதல் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரையிலான படிப்பை முழுமையாக தமிழ் வழியில் பயின்று, புதிதாக அரசுப் பணியில் சேருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
புதிய விதிகளின்படி, பிற மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு படித்துவிட்டு, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் தமிழ் வழிக் கல்விக்கான முன்னுரிமையைப் பெற முடியாது. அதேபோல், தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிடமிருந்தும் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடியாக தமிழ் வழியில் சேர்ந்து படித்தவர்களுக்கும், பிற மாநிலங்களில் தமிழ் வழியில் கல்வி பயின்று பின்னர் தமிழ்நாட்டில் படிப்பைத் தொடர்ந்தவர்களுக்கும் இந்த முன்னுரிமை பொருந்தும்.
மேலும், ஏற்கனவே தமிழ் வழிக் கல்வி முன்னுரிமையின் அடிப்படையில் அரசுப் பணியில் நியமனம் பெற்ற ஒருவர், மீண்டும் அதே வகையான முன்னுரிமை காலிப் பணியிடங்களுக்கு போட்டியிட முடியாது என்ற கட்டுப்பாடும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதிய அரசுப் பணி நியமனங்களில் 20 சதவீத தமிழ் வழிக் கல்வி முன்னுரிமை கட்டாயமாகப் பின்பற்றப்படும். இந்த நடவடிக்கை தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிப்பதுடன், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
20 percentage priority in government jobs for those educated in the Tamil medium Governor gives the green signal to the bill