10,000 பேர் ஒரே நாளில் விருப்ப மனு! தி.மு.க. தான் ஒரே எதிரி… அ.தி.மு.க. கணக்கிலேயே இல்லை! - செங்கோட்டையன் அதிரடி பேச்சு - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற சந்திப்பில், தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளைத் தெளிவாக வெளிப்படுத்தினார்.

“தமிழக வெற்றிக்கழகத்திற்கு அரசியல் ரீதியாக ஒரே எதிரி தி.மு.க. தான்; பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க. எங்களுக்கு கணக்கில் கூட இல்லை,” எனத் தொடங்கிய அவர், “தமிழக அரசியல் களத்தில் த.வெ.க.வின் நேரடி போட்டி தி.மு.க.வுடனே; அ.தி.மு.க. ஒரு வலுவான மாற்றாகவே இல்லை,” என்று கடுமையாக விமர்சித்தார்.

கட்சியின் வளர்ச்சியைச் சுட்டிக்காட்டிய அவர், “தேர்தலில் போட்டியிட ஒரே நாளில் 10,000 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்; மேலும் 15,000 பேர் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், ஆன்லைன் வழியாகவும் மனு பெற ஏற்பாடு செய்துள்ளோம்,” என்றார்.

வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு பல கட்சிகள் த.வெ.க. கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருவதாகவும், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகளில் வாய்ப்பு இல்லாதவர்கள் த.வெ.க.வுக்கு திரளுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

குறுகிய காலத்திலேயே வலுவான கூட்டணி உருவாகி, தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக த.வெ.க. உருவெடுக்கும் என நம்பிக்கையுடன் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10000 people submitted applications single day DMK only enemy AIADMK not even reckoning Sengottaiyan sensational speech


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->