கையை மீறி போகும் பாட்டலுக்கு 10ரூபாய் விவகாரம்! நேரடியாக இறங்கிய விஜய்! தீர்வு காண முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!
10 rupees for a bottle that is out of hand Vijay directly intervened Chief Minister Vijay urgently advised to find a solution
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் முதலமைச்சர் ஜோசப் விஜய், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் விக்னேஷ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
டாஸ்மாக் நிர்வாகம் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் மற்றும் சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் கடைகள் இரண்டு வாரங்களுக்குள் மூடப்படும் என்று முதலமைச்சர் விஜய் முன்னதாக அறிவித்திருந்தார்.
ஆனால், அதிகாரப்பூர்வ தகவல்களின்படி அறிவிக்கப்பட்ட 717 கடைகளில் இன்னும் 212 கடைகள் மூடப்படாமல் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளை மூடுவதில் உள்ள நடைமுறை மற்றும் சட்டரீதியான சிக்கல்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
எஞ்சியுள்ள 212 கடைகளையும் விரைவாக மூட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக நிலுவையில் உள்ள சட்ட மற்றும் நிர்வாக தடைகளை உடனடியாக களையவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், டாஸ்மாக் கடைகளில் காலி மதுப் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்கு பாட்டிலுக்கு ரூ.10 வழங்கும் திட்டம் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் அமல்படுத்தலில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் ஊழியர்கள் தரப்பில் எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
காலிப் பாட்டில் திட்டத்தை சீர்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், கடைகள் மூடப்படுவதால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு மாற்றுப் பணியிடங்கள் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மாக் நிர்வாகத்தை சீரமைத்து, பொதுமக்களின் குறைகளை விரைவாக தீர்க்கும் வகையில் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
10 rupees for a bottle that is out of hand Vijay directly intervened Chief Minister Vijay urgently advised to find a solution