தலை முடி உதிர்கிறது என்ற கவலையா.? வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த ஹேர் டானிக்கை பயன்படுத்தி பாருங்கள்.! - Seithipunal
Seithipunal


ஆண் பெண் என இருப்பாலருமே விரும்புவது அடர்த்தியான பளபளப்பான  மற்றும் கருமையான கூந்தலை தான். தலை முடியை பராமரிப்பதிலும் அழகாக நேர்த்தியாக வைத்திருப்பதிலும் அனைவருக்குமே விருப்பம் உண்டு. ஆனால் மாறிவரும் காலச்சூர் நிலை  வாழ்க்கை முறை ஆகியவற்றால் கூந்தல் உதிர்வது தலை முடி புலிவை இழப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கான ஒரு எளிய கை வைத்திய முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தண்ணீர்  - 2  கப் 
ரோஸ்மேரி இலைகள்  - 2  டீஸ்பூன் வெந்தய விதைகள்  - 1  ஸ்பூன்

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் இரண்டு டீஸ்பூன் ரோஸ்மேரி இலைகள் மற்றும் ஒரு ஸ்பூன் வெந்தய விதைகளை போட்டு அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து அடுப்பு அணைத்துவிட்டு  நன்றாக ஆறியதும் வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில்  மாற்றி வைக்கவும். இந்த டானிக்கை உங்களது வேறு முடிகளில் படும்படி  ஸ்பிரே செய்து பயன்படுத்தவும். மீதம் இருக்கும் டானிக்கை பிரிட்ஜில் வைத்து நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

பயன்கள் :

மருத்துவ ஆய்வுகளின் படி ரோஸ்மேரி இலைகள் முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு பயன்படும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வெந்தய விதைகள் முடி உதிர்வதற்கு சிகிச்சையளிக்க பயன்படும். எனவே இந்த ஸ்பிரேயை பயன்படுத்தி வரும்போது கூந்தல் உதிர்வது தடுக்கப்படுவதோடு முடி வளர்ச்சியும்  அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

worry about har fall try this home made har tonic


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->