நீங்க ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் எடுத்துருக்கீங்களா.? அதை பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க.! - Seithipunal
Seithipunal


இன்றைய அவசர காலகட்டத்தில் நம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது மிகவும் அரிதாகி விட்டது. ஏதேதோ தேவைகளுக்காக  ஓடிக்கொண்டே இருக்கும் நாம் நம்முடைய இன்றியமையாத ஆரோக்கியத்தினை பற்றியும் அதற்காக கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் புறந்தள்ளி வருகிறோம். இதனால் திடீரென ஏற்படும்  உடல் நலக்குறைவை சமாளிப்பதற்கும் நம்முடைய மருத்துவச் செலவுகளை ஈடு செய்வதற்கும் நம்முடைய சேமிப்பை செலவிட வேண்டி இருக்கிறது. இதனால் கடன் போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றோம். இதுபோன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்கு தான் மருத்துவ காப்பீடு நமக்கு பயன்படுகிறது. இந்த மருத்துவ காப்பீடு எவ்வாறெல்லாம் நமக்கு பயன் தருகிறது என்று பார்ப்போம்.

மருத்துவ காப்பீடு:

விபத்துக்கள் நோய்கள் மற்றும் இயலாமை ஆகியவை முன்கூட்டியே அறிவித்து விட்டு நமக்கு வருவதில்லை. எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் இது போன்ற இன்னல்களில் இருந்து நம்மை காப்பதற்கு என்றே முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது  அதற்கான ஒரு சிறந்த வழி தான் மருத்துவ காப்பீடு.

 

சுகாதார காப்பீடு அல்லது மருத்துவ காப்பீடு என்பது நமக்கு ஏற்படும் மருத்துவ அவசர காலத்தில் மருத்துவ செலவுகளுக்கான பாதுகாப்பை வழங்குகிறது. பாலிசிதாரரின் தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின் மூலம் ஒருவருக்கு மருத்துவ அவசர தேவைகளின் போது அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ செலவுகளில் பாதுகாப்பினை வழங்குகிறது. இதற்கான செலவுகள் நமது பாலிசியில் இருந்து  ஈடு செய்யப்படுகின்றன.

தற்காலத்தில் பணி மற்றும் குடும்பச் சூழல்களால் மனிதன் ஓய்வின்றி உழைத்து வருவதால் நோய்களுக்கு ஆளாகின்றனர். தரமான மருத்துவ சேவைகள் அதிகரித்துள்ளதால் அவற்றின் செலவும் உயர்ந்துள்ளது. மருத்துவ காப்பீடு செய்யாமல் இருந்தால் மருத்துவ செலவுகள் ஒருவரின் சேமிப்பு அனைத்தையும் தீர்த்துவிடும்.

எனவே மருத்துவ காப்பீடு திட்டம் என்பது பாலிசிதாரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ செலவிற்கான பாதுகாப்பை வழங்குகிறது. அவர் எடுத்திருக்கும் பாலிசியின் அடிப்படையில்  விபத்து அல்லது ஏதேனும் நோய் ஏற்படும் போது மருத்துவ செலவுக்காக சிறு தொகை மட்டுமே செலுத்த  வேண்டி வரும். இதனால் நமது சேமிப்பு பாதுகாக்கப்படுவதோடு மருத்துவ செலவு நேரங்களில்  தேவையில்லாத பதற்றமும்  கவலையும் இருக்காது.

இளம் வயதாக தானே இருக்கின்றோம் இப்போது எதற்கு மருத்துவ காப்பீடு என்று யோசிக்காமல் சிறு வயதிலேயே மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வதன் மூலம் நமது சேமிப்பு  கணிசமாக இருக்கும் மேலும் சிறு வயதிலேயே பாலிசி எடுத்துக் கொள்வதால் அந்த பாலிசிக்கான கால அளவு குறைவாக இருக்கும். மேலும் இளம் பாலிசிதாரர்களுக்கு செலுத்த வேண்டிய பாலிசி தொகையும் குறைவு. இதனால்  அதிகமான மருத்துவ பலன்களை நாம் பெற முடியும் எனவே தனிநபராகவோ அல்லது குடும்பமாகவோ மருத்துவ காப்பீடை  செய்து கொள்வது என்றுமே நன்மை பயக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What are the benefits of taking health insurance


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->