அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.. அக்னிதேவன் பசியாறும் 21 நாட்கள்.. என்ன செய்யலாம்? - Seithipunal
Seithipunal


அக்னி நட்சத்திரம் ஆண்டுதோறும் 21 நாட்கள் வருகின்றன. அக்னி நட்சத்திர நாளில் சந்திரன் மட்டுமல்லாது, பூமி கூட சூரியனுக்கு சற்று அருகே இருக்கும். அக்னி நட்சத்திரம் என்பது சூரியனுடைய சஞ்சாரம் தொடர்பாக அமையும் காலப்பகுதியாகும். பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த பகுதியாகும். இந்நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும், இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பத்தை தரும்.

அக்னி நட்சத்திர வரலாறு :

முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னிதேவனுக்கு மந்தநோய் ஏற்பட்டது. அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பை குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பை தின்றால்தான் தீரும். எனவே, அக்னி பகவான் காண்டவ வனத்தை தேர்ந்தெடுத்தான்.

அவ்வனத்தில் உள்ள அரக்கர்களும், கொடிய விலங்குகளும், தாவரங்களும், சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னிதேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன. 'அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்" என வருணன் கூறினான்.

இதையறிந்த அக்னிதேவன் கிருஷ்ணரிடம் ஓடி, 'நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்" என முறையிட்டான். கிருஷ்ணர் அர்ஜூனனை பார்த்தார். அர்ஜூனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான். அப்போது அக்னிதேவன் தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டான்.

அப்போது கிருஷ்ணர், '21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியை தீர்த்துக் கொள்" என்றார். அதன்படி அக்னிதேவன் காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசி தணிந்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர தினம் என்று சாஸ்திரங்களில் கூறுப்படுகிறது.

அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்?

இந்த அக்னி நட்சத்திரத்தின்போது வீடு கட்ட ஆரம்பிப்பது மற்றும் அதற்கான கிணறு வெட்டுதல், பூமிபூஜை செய்வது, விவசாய விதைப்பு வேலைகள், மரம் வெட்டுதல், குழந்தைகளுக்கு காது குத்தி மொட்டையடித்தல் போன்றவைகளை தவிர்ப்பது நல்லது.

அதேநேரத்தில் கட்டிய வீட்டில் குடிபுகுதல், வாடகை வீடு மாறுதல், நிச்சயதார்த்தம், பெண் பார்த்தல், திருமணம், சீமந்தம், உபநயனம் போன்ற சுபகாரியங்கள் செய்ய தடையில்லை.

ஜோதிட ரீதியாக இது சில விஷயங்களுக்கு தோஷ காலம் எனப்படுவதால் பழமையான சிவன் கோவில்களில் சர்வேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்விப்பது சகல தோஷத்தையும் நீக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today beginning the agni star


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->