உடல் எடையை குறைக்கும் இளநீர்! அட்டகாசமான தகவல்! - Seithipunal
Seithipunal


தற்காலத்தில் நாம் குடிக்கின்ற ரசாயன குளிர்பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன என்று நாம் அறிந்ததே. சுவைக்கு ஆசைப்பட்டு நாம் குடிக்கின்றோம். இதை விட சுவையான புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு பானத்தை நாம் எப்படி மறந்தோம்? நாம் தினமும் நடக்கும் ரோட்டோரங்களில் இன்றும் கிடைக்க கூடிய  இளநீரில் நம் உடல் எடையை குறைக்கும் சக்தி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பிதான் ஆக வேண்டும். இளநீர் உடல் எடையை எவ்வாறு குறைக்க உதவுகிறது என்று நாம் இன்று காண்போம்!

மிகவும் குறைவான கலோரி இளநீரில் இருப்பதினால் உங்க எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் உங்களுக்கு  நீரிழப்பு ஏற்படுத்தாமல் இருப்பதினால் தாகம் எடுக்கிறது என்று ரசாயன குளிர்பானங்களை குடிக்காமல் இருப்பதற்கு வழி வகுக்கிறது. 
 
உடலின் செயல் திறனை அதிகரிக்கிறது இதனால் உடல் பருமன் அடையாமல் காக்கிறது. மேலும் உணவு செரிமானத்தை சீர்படுத்துகிறது இதனால் உடலுக்கு தேவையான சக்தியை பெற உதவுகிறது.

இரத்தத்தில் உள்ள எல் டி எல் என்ற கெட்ட கொழுப்புகளை அகற்றி பைல் ஆசிட் ஆக மாற்றுவதால் கெட்ட கொழுப்பு உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இதனால் இதயத்துக்கு செல்லும் இரத்தம் தங்கு தடையின்றி செல்வதினால் உடல் ஆரோக்கியமாகவும் உடல் எடை கட்டுக்குள்ளும் இருக்கும்.

உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும் தைராய்டு சுரபி ஒழுங்காக வேலை செய்ய இளநீர் உதவுகிறது. இதனால் தைராய்டு சுரபியினால் உடல் எடை கூடும் வாய்ப்பு குறைகிறது.

சரி இளநீரை எப்போது எப்படி குடிக்கலாம்?

இளநீரை காலை உடற் பயிற்சிக்கு பிறகு குடிக்கலாம். அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் காலை அல்லது மதிய உணவுக்கு பின் அனைவரும் எடுத்துக்கொள்ளுவது மிக நல்லது. 

ஒருநாளைக்கு ஒரு இளநீர் தான் எடுத்து க்கொள்ள வேண்டும். இயற்கையான சர்க்கரையாக இருந்தாலும் ஒன்றுக்குமேல் குடிப்பதினால் உடல் எடை குறைப்பதற்கு உதவாமல் போய் விடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tender coconut water initiates weight loss 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->