பேச்சுலர் ஸ்பெஷல்.! கத்தரிக்காய் பெப்பர் பிரை.. 5 நிமிடத்தில் அட்டகாசமாய் செய்யலாம்.!  - Seithipunal
Seithipunal


சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும் கத்தரிக்காய் பெப்பர் பிரை. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவைப்படும் பொருட்கள் :

கத்தரிக்காய் - அரை கிலோ
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவைக்கு

செய்யும் முறை :

கத்தரிக்காயை நீளவாக்கில் வெட்டி வைத்து கொள்ளுங்கள்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்த பின் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.

கத்தரிக்காய் பாதியளவு வெந்தவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் உப்பு சேர்த்து நன்கு வேகும்வரை வதக்கவும்.

கத்தரிக்காய் நன்றாக வெந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான கத்தரிக்காய் பெப்பர் பிரை ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pepper fry brinjal special


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->