பாய் வீட்டு பிரியாணிக்கு அட்டகாசமான தால்ச்சா செய்வது எப்படி.! - Seithipunal
Seithipunal


பாய் வீட்டு பிரியாணி நாலே ஒரு டேஸ்ட் தாங்க அதுலயும் அதுக்கு சைடிஷா செய்யப் போற ஒரு தால்சா இன்னும் டேஸ்ட் அதிகமா கொடுக்கும் அந்த தால்ச்சாவ எப்படி செய்றதுன்னு ஒரு ரெசிபி  பார்க்கலாம்  வாங்க

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு-1 கப்
கடலை பருப்பு -1/2 கப்
மட்டன் எலும்பு-1/4 
மல்லித்தூள் -2  டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் -1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
சீரகத்தூள் 1/2ஸ்பூன்
மிளகு தூள் -1/4 ஸ்பூன்
பட்டை கிராம்பு தூள் 1/4ஸ்பூன் புளி - பெறிய நெல்லிக்காய் அளவு
மாங்காய் -1
கத்தரிக்காய் - 1/4கிலோ
வாழைக்காய் -1 
உருளைக்கிழங்கு -1
பச்சை மிளகாய் -4 
மல்லி புதினா - சிறிதளவு 
பெறிய வெங்காயம் - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை;

முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து துவரம் பருப்பு கடலைப்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி அது சேர்த்துக் கொள்ளவும் அதோடு எடுத்து வைத்த மட்டன் எலும்பையும் கழுவி அதில் சேர்த்துக் கொண்டு பின் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி அடுப்பில் வைக்கவும்
மூன்று விசில் வந்து பருப்பு வெந்தவுடன் அடுப்பை அணைத்து குக்கரை ஆறிவிடவும் வேறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணையும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி விடும் பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் அதனுடன் பச்சை மிளகாய் 4 சேர்த்து வதக்கவும்

வெங்காயம் வதங்கியது இதில் தக்காளி சேர்த்து அதையும் நன்றாக வதக்கவும் தக்காளி குலைந்து வந்ததும் அதில் நாம் எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து அதனுடன் வதக்கவும் மசாலா பொருட்கள் வதங்கியதும் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பின் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் கத்திரிக்காய் வாழைக்காய் சேர்த்து உருளைக்கிழங்கு அனைத்தையும் போட்டு கொதிக்க விடவும் இந்த காய்கறிகள் சிறிது வெந்ததும் பிறகு மாங்காய் சேர்க்க வேண்டும் மாங்காய் வெந்ததும் நாம் வேகவைத்து தனியாக எடுத்து வைத்துள்ள பருப்பு எலும்பு கலவையை சேர்த்து உப்பு போட்டு நன்றாக கொதிக்க விடவும்.  காய்கறி எல்லாம் வெந்ததும் அதில் எடுத்து வைத்த புளியை கரைச்சு ஊத்தி அதன் பிறகு  கொதிக்க  விடவும் பின்பு மல்லி புதினா இலைகள் தூவி இறக்கவும்.

பாய் வீட்டு தால்ச்சா மணக்க மணக்க தயாராகி விட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muslim style biriyani side dish thalchcha receipe


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->