வெறும் தேங்காய் எண்ணெய் போதும்!பற்களில் இருக்கும் கடினமான கறைகள்? வீட்டிலேயே எளிதாக நீக்கும் 3 சூப்பர் வைத்தியங்கள்! - Seithipunal
Seithipunal


பற்கள் சுத்தமாகவும் வெள்ளையாகவும் இருந்தால் சிரிக்கும் முகத்திற்கே தனி அழகு. ஆனால் பற்களை சரியாக பராமரிக்காதால் அதன் உள், வெளிப்புறங்களில் விடாப்பிடியான மஞ்சள், கருப்பு கறைகள் உருவாகிவிடும். இவற்றை அகற்ற பல் டாக்டரிடம் சுத்தம் செய்யும் போது நல்ல காசு செலவாகும். அதற்கு மாற்றாக, வீட்டிலேயே கிடைக்கும் சில சாதாரண பொருட்களால் இந்தக் கறைகளை எளிதாக நீக்க முடியும்.

1. பேக்கிங் சோடா + பல் விழுது + உப்பு
பற்களின் மேல் படியும் பிடிவாதமான கறையை அகற்ற பேக்கிங் சோடா சிறந்த கருவி.

  • 1 ஸ்பூன் பேக்கிங் சோடா

  • சிறிதளவு டூத் பேஸ்ட்

  • ஒரு சிட்டிகை உப்பு
    இவற்றை கலந்து பற்களைக் தேய்க்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்கவும். கறைகள் தளர்ந்து நீங்கும்.

2. கொய்யா இலை மென்று துப்புதல்
கொய்யா இலைகளில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை, பற்களில் இருக்கும் தொற்றுகளை குறைப்பதோடு கறைகளையும் அகற்றும்.

  • தினமும் 2 கொய்யா இலைகளை நன்றாக கழுவி மென்று துப்பவும்.

  • நாள் இரண்டுமுறை இதை செய்தால் பற்கள் மேலும் சுத்தமாகும்.

3. தேங்காய் எண்ணெய் + பேக்கிங் சோடா மிஷ்சர்
தேங்காய் எண்ணெய் வாயிலுள்ள பாக்டீரியாக்களை குறைத்து ஈறுகள் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

  • காலை பல் துலக்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் சுற்றி “ஆயில் புல்லின்” செய்யவும்.

  • பல் சொத்தை, ரத்தக்கசிவு போன்றவை குறையும்.
    பற்களில் இருக்கும் கறைகளை நீக்க

  • 1 ஸ்பூன் பேக்கிங் சோடா

  • 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
    இவற்றை கலந்து பல் துலக்கும் பிரஷ் கொண்டு பற்களை மெதுவாக தேய்க்கவும்.

இதனால் கறைகள் மட்டும் இல்லாமல் வாய்த்துர்நாற்றம் கூட குறைவதை நீங்கள் உணரலாம்.

வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த எளிய வைத்தியங்கள், பற்கள் சுத்தமாகவும் வெள்ளையாகவும் ஜொலிக்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Just coconut oil is enough Tough stains on your teeth 3 super remedies to easily remove them at home


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->