வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க சூப்பர் டிப்ஸ் இதோ.!  - Seithipunal
Seithipunal


வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க என்ன வேண்டும் எப்படி இருக்க வேண்டுமென பலருக்கும் சந்தேகம் இருக்கக்கூடும். அந்த கேள்விகளுக்கான பதிலை இங்கே பார்ப்போம். 

எவ்வளவு தான் பணம், காசு இருந்தாலும் மனதில் நிம்மதி குடிகொண்டிருக்கவில்லை என்றால் நமது வாழ்க்கை வெறுமையில் வீணாகிவிடும். நாம் அதிகளவில் மன நிம்மதியை இழக்கக்கூடிய காரணங்களை கண்டு கொண்டாலே அதற்கு தீர்வு காணுவது எளிமையாகிவிடும்.

அந்த வகையில், நாம் நம்மீது வெறுப்புடன் இருக்கக்கூடும். நாம் ஏதாவது சில முடிவுகளை எடுத்துவிட்டு அது தவராகவிட்டால் அதை நினைத்து நம்மீது நமக்கே வெறுப்பும், ஆத்திரமும் வரக்கூடும். ஆனால், இதை சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் தவறான முடிவுகளை எடுப்பது என்பது அனைவருமே செய்யக்கூடிய விஷயம் தான். 

எனவே, அதிலிருந்து அனுபவங்களை எடுத்துக்கொண்டு கடக்க முயற்சிக்க வேண்டும். எந்த சூழலிலும் நம்மை நாம் நேசிப்பதை நிறுத்த கூடாது. என்ன தான் தவறான முடிவுகளை எடுத்திருந்தாலும் அதற்காக மன உளைச்சலில் உழல வேண்டியதில்லை.

நம்மீது நமக்கு நம்பிக்கை எப்போதும் குறைய கூடாது. தாழ்வு மனப்பான்மை இல்லாமல் எப்போதும் நம்மை நாம் உயர்வாக என்ன வேண்டும். பிறரை பார்த்து அவர்களுடன் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு மனிதனும் தனி தனி. நீங்கள் எப்போதும் தனித்துவமானவர் என்று நம்புங்கள். 

நீங்கள் யாருக்காவது தீங்கு விளைவித்து இருந்தால் இனி அப்படி செய்யாமல் இருக்க முயற்சியுங்கள். அதைவிட்டு அதற்காக குற்ற உணர்வில் மூழ்காதீர்கள். உங்களை நீங்கள் தான் மன்னிக்க வேண்டும். அதை பிறரிடம் எதிர்பார்த்து கொண்டு இருக்காதீர்கள். சுய சார்புடன் வாழ பழகுங்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to happy always tips in tamil


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->