உங்கள் வீட்டின் மகிழ்ச்சி பெயிண்ட் கலரில் கூட இருக்கு தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


சொந்த வீடு என்பது அனைவரின் கனவே. அத்தகைய வீடு நம் விருப்பம்போல் அமைவதில் எவ்வளவு மகிழ்ச்சி அடங்கியுள்ளது. வீட்டில் இன்ப, துன்பங்கள் மட்டுமின்றி பல மறக்கமுடியாத நினைவுகளும் நிறைந்திருக்கும்.

சொந்த வீடு கட்டும்போது ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறோம். இதில் மிக முக்கியமானது வீட்டிற்கு தரும் வண்ணங்கள்தான். வீட்டை நம் எண்ணங்களுக்கு ஏற்றார்போல் வண்ணங்களால் நிரப்பும்போதுதான் அவ்வீடு முழுமை பெறுகிறது. வீடு தரமானதாகவும், உறுதியானதாகவும் இருக்க எவ்வளவு முயற்சி செய்கிறோமோ, அதேபோல் வீட்டிற்கு தரும் வண்ணமானது மனதை கொள்ளை கொள்வதாக இருக்க வேண்டும்.

மாறி வரும் உலகில், வீடுகளை அழகுப்படுத்தும் வண்ணங்களும் காலத்திற்கேற்ப மாறி வருகிறது. வீட்டை அழகுப்படுத்தும் வண்ணங்கள் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

வண்ணங்கள் பல :

வண்ணங்கள் பல உண்டு. அதை தேர்ந்தெடுப்பதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். நமது வீட்டிற்கு எந்த வண்ணம் கச்சிதமாக இருக்கும் என்று சிந்தித்து வண்ணங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். முன்பை காட்டிலும் தற்போது டெக்னாலஜி மிகவும் வளர்ந்துவிட்டது. பல வண்ணங்களில் பெயிண்ட் இருப்பதுபோல் பல பெயிண்ட் பிராண்ட்களும் உள்ளது. நாம் பெயிண்ட் பிராண்ட்களை தேர்வு செய்வதில் மிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

homw paint affect family happy


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->