ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பச்சை மிளகாயில் சூப்பர் ரெசிபி..!! - Seithipunal
Seithipunal


பச்சை மிளகாயில் வளமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதனால் நம் உடலின் பாதுகாவலனாக அது உதவுகிறது. இயக்க உறுப்புகளின் பாதுகாப்பிற்கு உதவுகிறது. தற்போது பச்சைமிளகாயில் பச்சடி செய்வது எப்படி என பார்போம்.

தேவையான பொருள்கள்
பச்சைமிளகாய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் (பொடித்தது) - 4 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

அரைக்க
தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி

தாளிக்க 
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
கடுகு - 1 மேஜைக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 மேஜைக்கரண்டி

செய்முறை:

பச்சை மிளகாய், வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். இரண்டும் சம அளவாக எடுத்துக் கொள்ளவும். புளியை 100 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

பின்னர் அதில் வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர், மல்லிப்பொடி, மஞ்சள்தூள், வெல்லத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

மசாலா வாடை போனதும் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து பச்சடி கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். காரம் அதிகமாக இருந்தால் கூடுதலாக வெல்லத்தூள் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Green Chily recipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->