பாத வெடிப்பை இப்படியும் சரிசெய்யலாம்.. அழகான பாதங்கள் பெற ஈசி டிப்ஸ்..! - Seithipunal
Seithipunal


சிலருக்கு பாதங்களில் வெடிப்பு இருக்கும். பாதவெடிப்பால் வலி, எரிச்சல் கூட அதிகம் உண்டாகும். இதற்கு பாதவெடிப்பை சரிசெய்வது மட்டுமே தீர்வாகும். பாதவெடிப்பை வீட்டிலேயே எப்படி சரிசெய்யலாம் என தெரிந்து கொள்வோம்.

வெஜிடபிள் ஆயில் : இரவு தூங்குவதற்கு முன் கால்களை சுத்தம் செய்து எண்ணெயை தடவி தூங்கி விடுங்கள். இப்படி செய்து வர பாதவெடிப்பு குணமாகும்.

வாழைப்பழம் : வாழைப் பழத்தை நன்கு மசித்து கூழாக்கிக் கொள்ளவும். கால்களை நன்கு சுத்தம் செய்து துடைத்தபின் வாழைப்பழத்தை வெடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தடவுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவி வர பாதவெடிப்பு சரியாகும்.

எலுமிச்சை : எலுமிச்சை சாறை வெது வெதுப்பான நீரில் பிழிந்து கலந்து கொள்ளுங்கள். அதில் 20 நிமிடங்கள் கால்களை சுத்தம் செய்தபின் ஊற வையுங்கள். வெடிப்புகளோடு கால்களில் இருக்கும் இறந்த செல்களையும் நீக்கிவிடும்.

கற்றாழை ஜெல் : கால்களை வெதுவெதுப்பான நீரில் வைத்து அதனை சொரசொரப்பான கல்லை வைத்து சுத்தம் செய்த பின் கற்றாழை ஜெல்லை தேய்த்து வர பாதவெடிப்பு நீங்கி பாதம் அழகாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Foot Cracks can be repaired with house hold items


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal