அடிக்கிற வெயிலுக்கு சூப்பரா காடை குழம்பு சாப்பிட்டா எப்படி இருக்கும்....? - Seithipunal
Seithipunal


நாவிற்கு சுவையான காடை குழம்பு ...
தேவையான பொருட்கள் :
பொருள்                                அளவு
காடை                                       4 
பெரிய வெங்காயம்              2 
கரம் மசாலா தூள்                ஒன்றரை டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லித் தலை         ஒரு கைப்பிடி 
புதினா                                    ஒரு கைப்பிடி 
கறிவேப்பிலை                     2 கொத்து 
பச்சை மிளகாய்                  2 
தயிர்                                       கால் கப் 
மஞ்சள் தூள்                         அரை டீஸ்பூன் 
தேங்காய்                              கால் கப் 
கசகசா                                  1 டீஸ்பூன் 
எண்ணெய்                           தேவைக்கேற்ப 
உப்பு                                      தேவைக்கேற்ப 
மிளகாய் தூள்                      3 டேபிள் ஸ்பூன் 
மிளகுத் தூள்                        1 டீஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது         1 டீஸ்பூன் 


செய்முறை :
முதலில்,பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். பின்பு தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காடையை சுத்தம் செய்து அதனுடன் மஞ்சள் தூள், தேவைக்கேற்ப உப்பு, கால் கப் தயிர் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். அதன் பிறகு காடை நன்கு ஊறியதும் எடுத்து ஒரு முறை கழுவிக் கொள்ளவும். தேங்காயுடன் கசகசா சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரம் மசாலா தூள் போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.வெங்காயம் சற்று வதங்கியதும், தக்காளி, புதினா, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை போட்டு வதக்கவும்.அதனுடன் சுத்தம் செய்து ஊற வைத்திருக்கும் காடையை போட்டு 2 நிமிடங்கள் பிரட்டிவிடவும். காடையுடன் கரம் மசாலா, வெங்காயம், தக்காளி எல்லாம் ஒன்றாகச் சேரும்படி பிரட்டிவிடவும்.2 நிமிடங்கள் கழித்து காடை சற்று நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை பிரட்டவும்.பிறகு மிளகாய் தூள் மற்றும் மிளகுத் தூள் போட்டு நன்கு கிளறவும்.பின்னர் அரைத்த தேங்காய், கசகசா விழுது போட்டு கிளறவும். அனைத்தும் சேர்ந்து கிரேவி பதத்தில் திக்காக வந்ததும் 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கிளறி, வாணலியை மூடி 15 நிமிடங்கள் வேகவிடவும்.15 நிமிடம் கழித்து நன்றாக கொதித்ததும், கொத்தமல்லித் தழை தூவி இறக்கிவிடவும். அவ்வளவுதான்....சுவையான காடை குழம்பு தயார்.....
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை நெய் சாதம், சப்பாத்தி உடன் சேர்த்து சாப்பிடலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

eating super quail stew to beat scorching heat


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->