கோள்களில் எப்படி வைர மழை பொழியும்? இதென்ன அதிசயம்.! - Seithipunal
Seithipunal


கோள்களில் எப்படி வைர மழை பொழியும்?

வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் இந்த நான்கு கோள்களிலும் வைரம் மழையாக பெய்கின்றன. 

இந்த கோள்களில் மீத்தேன் அதிகமாக இருப்பதால் அந்த மீத்தேனில் மின்னல் தாக்கப்பட்டு அந்த மின்னலினால் மீத்தேன் வாயுவில் உள்ள கார்பன் புகையாக வெளியேறும். அந்த புகையாக வெளியே சென்ற கார்பன் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று சேர்ந்து கிராஃபைட் மற்றும் வைரமாக மாறி அந்த கோள்களில் மழை பெய்யும். 

விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களை விட பூமியில் அதிக மரங்கள் உள்ளது எப்படி?

நாசா வல்லுநர்களின்படி, நமது பால்வெளி மண்டலத்தில் 100 பில்லியன் முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் வரை எங்கும் இருக்க முடியும். மறுகையில், 2015ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நேச்சர் பத்திரிக்கை ஆய்வு அறிக்கையின் படி உலகெங்கிலும் உள்ள மரங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 3.04 டிரில்லியன் மரங்கள் உள்ளன.

பீரியாடிக் டேபிளில் ஒரே ஒரு ஆங்கில எழுத்து மட்டும் இருக்காது எது?

பீரியாடிக் டேபிளில் ஒரே ஒரு ஆங்கில எழுத்து மட்டும் இருக்காது அது 'து" ஆகும். 

நாம் சாப்பிடும் வாழைப்பழத்தில் கதிரியக்கம் உள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

இது நம்மிடம் மறைக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளில் ஒன்றாகும். வாழைப்பழங்களில் பொட்டாசியம் உள்ளது என்பதை அறிந்த நமக்கு, அதன் பொட்டாசியம் சிதைவு அடையும்போது அவைகள் சற்றே கதிரியக்கத்தை உருவாக்குகின்றன என்பது தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை. இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கதிர்வீச்சு விஷத்தை உட்கொள்ள ஒரே நேரத்தில் நீங்கள் 1,00,00,000 வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். 

உலர்ந்த மணலில் எளிதாக நடக்க முடியாதது ஏன்?

உலர்ந்த மணலில் நிலவும் பிணைப்பு விசை மணல் துகள்களை ஒன்றோடொன்று இறுக்க ஒட்ட வைக்க முடியாத காரணத்தால் மணற்பரப்பானது கெட்டித்தன்மை குறைந்து தளர்ச்சியாக இருக்கும். இந்நிலையில் யாரேனும் நடந்தால், உடல் அழுத்தம் காரணமாக அவரது கால்கள் உலர்ந்த மணலில் ஆழமாகப் பதிந்து, மணற்பரப்பில் எளிதாக நடக்க இயலாமல் போகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

daimond rain


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->