நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடலில் இதெல்லாம் கூட நடக்குமா.?! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க.!  - Seithipunal
Seithipunal


நாம் உடலில் தலை முதல் கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய பலன்கள் கிடைக்கின்றன. அவை குறித்து இப்போது பார்க்கலாம்.

நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் நம் தலைமுடி மயிர் கால்கள் புத்துணர்ச்சி பெறுகிறது. எனவே முடி வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கிறது. 

வாரம் ஒரு முறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது நம் உடலில் ஏற்படும் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. 

இந்த நல்லெண்ணெய் குளியல் நரம்புகளை நிதானமாகவும், புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. அத்துடன் நல்லெண்ணையை தேய்த்து 15 முதல் 30 நிமிடங்கள் ஊற விடுவதால் நம் உடலில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் பளபளப்புடன் இருக்கும்.

வறண்ட மேனி இருப்பவர்களுக்கு இது பெரிதும் நன்மை பயக்கக்கூடும். பொடுகு தொல்லை இருப்பவர்கள் இந்த நல்லெண்ணெய் குளியல் போட்டால் ஓரிரு மாதங்களில் முற்றிலுமாக பொடுகு தொல்லை நீங்குவதை காண முடியும். 

உறக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இதுபோல நல்லெண்ணெய் தேய்த்து ஊற வைத்து குளிப்பது நல்ல உறக்கத்தை கொடுக்கும். கணினி மற்றும் செல்போன் உபயோகிப்பதால் கண்களில் ஏற்படும் சூடு உள்ளிட்டவை நீங்கி கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த நல்லெண்ணெய் குளியல் உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benifits of Oil bath For every weekend 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->