கோடைகாலத்தில் சுவையான இளநீர் குடிப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் தருகிறதா.! - Seithipunal
Seithipunal


இயற்கை மனிதனுக்கு அளித்த  வரப்பிரசாதங்களில் முக்கியமான ஒன்று இளநீராகும். இளநீர் பருகுவதால் நமது உடலில் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சி அடையும் என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால்  இளநீரில் நம் உடலுக்கு நன்மை தரக்கூடிய பல்வேறு விதமான நன்மைகள் இருக்கின்றன அவை என்ன என்று பார்ப்போம்.

இளநீர் நம் உடலில்  உஷ்ணத்தை தனணிப்பதோடு ரத்தத்தை சுத்தப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது  ரத்த சோகையை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வைக்கிறது.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இளநீரை  அடிக்கடி குடித்து வர அவர்களது ரத்த அழுத்தம்  சீராக இருப்பதோடு உடலிலிருக்கும் கொழுப்புகளையும் கட்டுப்படுத்துகிறது.

உடல் சூடு மற்றும் உடல் உஷ்ணத்திற்கும்  அம்மை போன்ற நோய்களுக்கும் மிகச் சிறந்த மருந்தாக பயன்படுவது  இளநீராகும். மேலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் குடித்து  வந்தால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அது மிகவும் முக்கியமானதாகும்.

சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சிறுநீர் தொற்று மற்றும் சிறுநீரில் இருக்கும்  கல்  போன்றவற்றிற்கு இளநீர் சிறந்த மருந்தாகும். மேலும் இது சிறுநீரகத்தின் செயல்பாட்டினையும் சீர்படுத்துகிறது.

இதய நோய், வயிற்று வலி, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீர் குடித்து வருவது சிறந்த மருந்தாகும். இளநீரிலிருக்கும் கால்சியம் நம் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of tender coconut in summer time


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->