டீ-யில் இஞ்சி போட்டு குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா.?
Benefits of ginger tea
பொதுவாக வீடுகளில் சமைக்கும்போது மஞ்சள் இஞ்சி ஏலக்காய் போன்ற பொருட்களை பயன்படுத்துவார்கள். இதில் இஞ்சி சாப்பிடும்போது காரமாக இருந்தாலும் சுவையையும் கொடுக்கும். அதேபோல் இஞ்சியில் பலவித ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதில் காலையில் எழுந்தவுடன் பலர் டீ குடிக்கின்றனர். அந்த வகையில் இஞ்சி டீ குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.
தினமும் காலையில் டீயில் இஞ்சி கலந்து குடித்தால் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. எனவே உங்களுக்கு வரக்கூடிய குமட்டலை இது தடுக்கும். மேலும், ஆக்ஸிடேடிவ் அழுத்தத்தையும் இது குறைக்கிறது.
அதேபோல் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி டீ குடித்தால் உடல்நிலை குறையும். டயட்டில் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை குடிக்கலாம்.

மேலும் தினமும் இஞ்சி டீ குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற பாக்டீரியாக்களை உடலில் வளர விடாமல் தடுக்கும். அதேபோல் நமது வாய்களில் பாக்டீரியா உற்பத்தியாவதை தடுத்து நமக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு இஞ்சி சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அதன்படி காலையில் இஞ்சி கலந்த தண்ணீர் குடித்து வந்தால் சர்க்கரை அளவு வெகுவாக குறையும் என கூறப்படுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக வலி ஏற்படும் போது இஞ்சி சாப்பிட்டால் வலி குறையும் என கூறப்படுகிறது. ஏனெனில் இஞ்சியில் அசிடாமினோபின், கஃபைன், நோவாஃபின் உள்ளது.