வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்னவாகும்?
benefits of ghee eat empty stomach
கொழுப்புச் சத்து அதிகளவில் நிறைந்துள்ள பொருள்களில் ஒன்று நெய். இதனை காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
* நெய்யில் அதிகளவில் பியூட்ரிக் அமிலம் உள்ளதால், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
* நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற வைட்டமின்களும் உள்ளதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன.
* நெய்யில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
* வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
* உணவுக்கு முன் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கும். இது வயிற்றில் அமில அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது.
* நெய்யில் உள்ள குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள் மற்றும் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவை உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
English Summary
benefits of ghee eat empty stomach