தாய்ப்பாலூட்டும் பெண்கள் காளானை எதற்காக தவிர்க்க வேண்டும்?..!! - Seithipunal
Seithipunal


இரத்தத்தில் கலந்திருக்கும் அதிகளவு கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்தப்படும் தன்மையை காளான் கொண்டுள்ளது. இரத்தம் சுத்தப்படுத்தப்படுவதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களில் ஏற்படும் கொழுப்புகளின் அடைப்பு பிரச்சனையில் இருந்து தவிர்க்க உதவுகிறது. 

காளானில் அதிகளவு நிறைந்துள்ள, உடலுக்கு மிகவும் தேவையான பொட்டாசியம் சத்தானது அதிகளவு உள்ளது. இது ஆறாத புண்களை குணப்படுத்தும் தன்மையை கொண்டது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் டி, வைட்டமின் இ போன்றவை அதிகளவு உள்ளது.

தாய்ப்பாலூட்டும் பெண்கள் காளானை எதற்காக தவிர்க்க வேண்டும், breast feeding, breast milk, தாய்ப்பால்,

காளானில் உள்ள எரிட்டினைன் என்கிற கொழுப்பு பொருளானது எந்த விதமான பாதிப்பும் இல்லாது, இரத்தத்தில் இருந்து பிற திசுக்களுக்கு எரிட்டினைனை வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி வைத்து உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

இவ்வாறாக உடலில் அதிகப்படியாக சேரும் கொழுப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு, இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. இரத்த சுத்தமாவதால் இதயம் நல்ல பலன் பெற்று, சீராக செயல்படவும் உதவுகிறது. இதயத்தின் பாதுகாப்பில் காளானின் பெரும்பங்கு முக்கியமானது.

காளானை சாப்பிடுவதால் மூட்டுவாதம் பிரச்சனை உள்ளவர்களுக்கு மூட்டுவாத பிரச்சனை சரியாகிறது. தினமும் காளான் சூப் குடிப்பது பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் பிரச்சனையில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், 100 கிராம் அளவுள்ள காளானில் 35 விழுக்காடு புரதசத்து நிறைந்துள்ளது.

தாய்ப்பாலூட்டும் பெண்கள் காளானை எதற்காக தவிர்க்க வேண்டும், breast feeding, breast milk, தாய்ப்பால்,

நமது உடலுக்கும், உடலின் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலம் காளானில் இருப்பதால் குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்தை அளிக்கிறது. கடுமையான காய்ச்சலின் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்கள் தினமும் காளான் சூப் அருந்திவர உடல் நலம் மேம்படும். 

முட்டைகோஸ், பச்சை பட்டாணியோடு சேர்த்து காளானை சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் பிரச்சனை மற்றும் ஆசனப்புண் பிரச்சனை போன்றவை குணமாகும். மேலும், குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்கள் காளானை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் வற்றும் பிரச்சனை உள்ளதால், தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் காளானை தவிர்ப்பது நல்லது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

why breast feeding mothers should avoid mushroom foods


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->