'வெள்ளை சிக்கன் குருமா' இப்படி ட்ரை பண்ணுங்க.!  - Seithipunal
Seithipunal


சுவையான வெள்ளை சிக்கன் குருமா எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
சிக்கன் 
வெங்காயம் 
இஞ்சி 
பூண்டு 
சீரகம் 
சோம்பு 
மிளகு தூள்
மல்லி தூள் 
கசகசா 
முந்திரி பருப்பு 
தேங்காய் துருவல் 
பச்சை மிளகாய் 
பட்டை 
கிராம்பு 
கருவேப்பிலை 
தேங்காய் எண்ணெய் 
தயிர் 
பிரியாணி இலை 
உப்பு 

செய்முறை: 
ஒரு மிக்ஸி ஜாரின் தேங்காய் துருவல் மிளகு சீரகம், சோம்பு, கசகசா, முந்திரி, வெங்காயம் அனைத்தும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். அதில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கனை சுத்தம் செய்து அதில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுது மல்லி தூள், மிளகு தூள், தேவையான அளவு உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கலந்து விடவும். 

குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு எடுக்கவும். பின்னர் அதில் புதினா இலைகளை சேர்த்து ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கருவேப்பிலை, மிளகாய் போட்டு தாளித்து குருமாவில் சேர்த்து எடுத்தால் அவ்வளவுதான் சுவையான வெள்ளை சிக்கன் குருமா தயார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

White Chicken Kurma Recipe in Tamil 


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->