சுவையான 'முள்ளங்கி சாப்ஸ்' ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!
radish chops recipe tamil
வித்தியாசமான சுவையில் முள்ளங்கி சாப்ஸ் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
வெங்காயம்
தக்காளி
இஞ்சி பூண்டு
மிளகு
கருவேப்பிலை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் அரை ஸ்பூன் மிளகை வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த மிளகு வெங்காயம், கருவேப்பிலை, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பின்னர் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். முள்ளங்கி நன்றாக வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து கருவேப்பிலை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி சாப்ஸ் தயார்.
English Summary
radish chops recipe tamil