வாய், வயிறு புண்ணை குணப்படுத்தும் மணத்தக்காளி தேங்காய்ப்பால்.! 
                                    
                                    
                                   how to make manathakkali thengaipal 
 
                                 
                               
                                
                                      
                                            கீரை வகைகளில் ஒன்றான மணத்தக்காளி வாய்ப்புண்ணை தீர்க்கக் கூடியது. வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள் இந்தக் கீரையை சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
இந்தக் கீரையில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு என்ற வேதிப்பொருள், வயிற்றில் உள்ள கட்டிகளைக் கரைக்கவும், கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்கவும் உதவுகிறது.
இந்த நிலையில், இந்தக் கேரையில் தேங்காய்ப்பால் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை
சின்னவெங்காயம்-
தேங்காய்
அரிசி கழுவிய நீர்
சீரகம்
நெய்
உப்பு
செய்முறை:
முதலில் மணத்தக்காளி கீரை மற்றும் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு சீரகம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கிடையே தேங்காயைத் துருவி அரைத்து பாலெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேகவைத்த கீரையில் அரிசி கழுவிய நீர் மற்றும் உப்பு கலந்து ஒரு கொதி வந்ததும், எடுத்து வைத்துள்ள தேங்காய்ப் பால் கலந்து இறக்கி விட வேண்டும்.
தொடர்ந்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்து கலந்துகொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மணத்தக்காளி தேங்காய்ப்பால் தயார்.
                                     
                                 
                   
                       English Summary
                       how to make manathakkali thengaipal