அழகு குறிப்பில் பூண்டின் மகிமைகள்...!
glories of garlic in beauty terms
முகப் பருக்கள் மறைய:
பூண்டு அல்லது கருந்துளசியை அரைத்துப் போட நாளடைவில் முகப் பருக்கள் மறையும்.
கருமையான தழும்புகள் நீங்க:
பூண்டிற்கு தழும்புகளைப் போக்கும் சக்தி உள்ளது. அதற்கு ஒரு துண்டு பூண்டை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை முழுவதும் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்தால் கருமையான தழும்புகள் நீங்கும்.

சீழ் நிறைந்த பருக்கள் மறைய:
2-3 பல் பூண்டை பேஸ்ட் செய்து, சீழ் நிறைந்த பருக்களின் மீது தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவவும்.இல்லாவிட்டால் ஒரு பல் பூண்டை சூடேற்றி, அதனை பருக்களின் மீது 10 நிமிடம் வைக்கவும்.இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்ய வேண்டும்.
English Summary
glories of garlic in beauty terms