கண்களில் கருவளையமா??...!! அப்போ இதோ உங்களுக்கான டிப்ஸ்...!!
Dark circles Romving Tips
கண்களில் கருவளையம் ஏற்படுவதால் தங்கள் அழகு பாதிக்கபடுவதாக பலர் நினைக்கின்றனர்.கருவளையங்களை வீட்டிலேயே நீக்க ஈசி டிப்ஸ்.
தக்காளி ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை, சிறிது புதினா சேர்த்து குடித்து வருவதால் கருவளையம் குறையும்
டீ பேக்கை ஒரு டப்பாவில் போட்டு ப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்த பின் அதை வைத்து கண்ணின் கருவளையத்திற்கு ஒத்தடம் கொடுத்து வந்தால் நாளடைவில் கருவளையம் மறைய தொடங்கும்.
சோற்றுகற்றாழையின் தோலையும் முள்ளையும் அகற்றிவிட்டு அதன் ஜெல்லை எடுத்து கண்களுக்கு அடியில் மசாஜ் செய்து பிறகு சுத்தமான பஞ்சினால் துடைத்து எடுத்து வந்தால் கருவளையம் மறையும்.
ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து 15 நிமிடங்கள் கண்களில் வைத்து எடுத்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.
English Summary
Dark circles Romving Tips