நீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்ட கம்புப் பணியாரம்.! - Seithipunal
Seithipunal


கம்புப் பணியாரம்:

தேவையான பொருள்கள்:

பச்சரிசி கால் கப்

கம்பு கால் கப்

இட்லி அரிசி கால் கப்

உளுந்து கால் கப்

பெருங்காயம் ஒரு சிட்டிகை

பச்சை மிளகாய் 2  

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தேவையான அளவு  

வெந்தயம் கால் ஸ்பூன்

கடுகு தேவையான அளவு  

கடலைப் பருப்பு தேவையான அளவு  

எண்ணெய் தேவையான அளவு  

சீரகம் தேவையான அளவு  

செய்முறை:

பச்சரிசி, இட்லி அரிசி, கம்பு, உளுந்து, வெந்தயம் ஆகிய இவை அனைத்தையும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரையில் ஊற வைக்கவும்.

பின்னர் ஊறவைத்தக் கலவையை சுமார் 8 மணி நேரம் நன்கு புளிக்கவிடவும்.

ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கடுகு, கடலைப் பருப்பு, சீரகம் ஆகிய இவை அனைத்தையும் தாளித்துக் கொண்டு அதனை மேற்கண்ட மாவுடன் கலக்கவும்.

பின்னர் பணியாரச் சட்டியில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் விட்டு இரண்டு, மூன்று முறை திருப்பிப் போட்டு முறுகலாக வாட்டி எடுக்கவும்.

இதோ இப்போது சுவையான கம்புப் பணியாரம் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cooking tips 15


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->