தாய்ப்பால் சுரப்பு குறைய காரணம் என்ன?. மார்பகத்தில் பால் கட்டுக்குவது எதனால்?. தீர்வு என்ன?..!!
Breast Feeding Issues and Solution If What to do if milk builds up in the breast
தாய்ப்பால் என்பது கடவுளின் எழில்மிகு இயற்கையின் படைப்பை போல, மற்றொரு உன்னதமான மற்றும் உணர்வுப்பூர்வமான விஷயமாகும். பெண்கள் தாய்மையடைந்து தனது குழந்தைக்கு உணவாக கொடுக்கும் தேவாமிர்தம். பொதுவாக பெண்களுக்கு தாய்ப்பால் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் அல்லது கர்ப்பமாக இருக்கையில் ஏற்படும். அதற்கான தீர்வுகள் மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து இனி காணலாம்.

சில பெண்களுக்கு தனக்கு தாய்ப்பால் குறைவாக சுரக்கிறதோ? என்ற சந்தேகம் இருக்கும். சிலருக்கு தங்களுக்குள்ளாகவே ஏற்படும் அச்சத்தால் அவ்வாறான மாய சந்தேகம் மற்றும் பால் குறைவது போன்ற உணர்வு ஏற்படும். சில பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகளின் வெளிப்பாடுகளால் ஏற்படும். பெண்கள் தங்களின் உணவுப்பழக்க வழக்கமுறைகள் காரணமாகவும் தாய்ப்பால் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். தூக்கமில்லாதது, முறையற்ற உணவுகளை சாப்பிடுவது போன்ற பிரச்சனையால் தாய்ப்பால் சுரப்பில் கட்டாயம் பிரச்சனை ஏற்படலாம்.

இதுமட்டுமல்லாது மன ரீதியான தயக்கம் தனது குழந்தைக்கு பாலூட்டுகையில் இருக்க கூடாது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தாய்ப்பால் நன்றாக சுரக்க மன ரீதியாக தாய் தயாராக வேண்டும். கருவில் குழந்தை இருக்கும் 5 முதல் 6 ஆவது மாதத்தில் இருந்து இதற்கான பயிற்சியை தொடங்க வேண்டும் என்றும், மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறுகின்றனர். பேறுகாலத்தில் மன ரீதியாக தயார் செய்வது, பாலூட்டும் முறைகள் குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பதை பின்பற்றுதல், உணவுமுறைகள் என்ற 3 மந்திரங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

பேறுகாலத்திற்கு முன்னரும், பின்னரும் துரித உணவுகளை தவிர்ப்பது, உணவகங்களில் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது எனவும் தெரிவிக்கின்றனர். மேலும், துரித உணவுகளில் உள்ள கலோரியால் பல பிரச்சனை வரும் என்றும், அடிக்கடி துரித உணவுகளை எடுத்துக்கொண்டால் பின்னாளில் பெரும் விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். துரித உணவுகளால் ஊட்டச்சத்தின் அளவு குறையும் என்றும், இதனால் உடல் பருமன் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

சில தாய்மார்கள் பேறுகாலத்திற்கு பின்னர் பால் கட்டும் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புண்டு. அதற்கான தீர்வுகள் குறித்து இனி காணலாம்.
தாய் தனது மார்பகத்தில் ஏன் பால் கட்டுகிறது என்பதை புரிந்திருக்க வேண்டும். குழந்தைக்கு பால் போதும் என நினைத்து பாலை மேற்படி வழங்காமல் தவிர்ப்பது, சரியான முறையில் குழந்தைகளுக்கு பாலூட்டாதது, குழந்தைக்கு பால் கொடுக்க மறுப்பது, குழந்தை மார்பக காம்புகளில் கடித்துவிடுவான் என்ற பயத்தில் பால் கொடுக்காமல் இருப்பது போன்ற காரணத்தால் பால் வெளியேறி செல்லாமல் திரண்டு கட்டியாகிவிடும். மனநிலை என்ற விஷயமும் இங்கு முக்கியத்துவம் பெறுவதால், மகிழ்ச்சியான சூழல் நிலவினால் பிரச்சனை கிடையாது.

எதோ ஒரு சூழ்நிலையில் மார்பகத்தில் பால் கட்டும் பட்சத்தில், குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன்னதாக மார்பக பகுதியை மென்மையாக மசாஜ் செய்து கொடுத்தால் மார்பக வலியை குறைத்து பாலை வெளியேற்றும். பெரியோர்கள் கூறும் சில நாட்டு வைத்திய முறைகள் சரிவரவில்லை அல்லது அதனை எடுத்துக்கொள்ள விருப்பமில்லை என்றால் மருத்துவரை அணுகுவது நல்லது. தாயின் எடைக்கும், தாயின் மார்பக அளவுக்கும், பால் சுரக்கும் விஷயத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது.

சில பெண்கள் மார்பகத்தின் அளவு குறைந்து இருப்பதால், குறைவான பால் சுரக்குமோ? என்ற எண்ணத்திலும் இருப்பார்கள். மார்பகத்தின் அளவு பால் சுரக்கும் விசயத்திற்கு சம்பந்தம் கிடையாது. ஊட்டச்சத்து உடலில் குறைவாக இருந்தால் மட்டுமே தாய்ப்பாலின் அளவு குறையும். இரத்த சோகை, ஊட்டச்சத்து பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்கு கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும். மீன், முட்டை, பருப்பு வகை உணவுகளையும் சாப்பிடலாம். துரித உணவுகள் அறவே கூடாது. பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தது 2 முதல் 3 வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் தான் அவர்களின் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை வழங்கி பாதுகாக்கிறது.

இன்றுள்ள சில பெண்கள் குழந்தைக்கு 6 மாதம் முதல் 9 மாதத்திற்குள் தாய்ப்பால் தந்தது போதும் என நினைக்கிறார்கள். அன்றைய காலங்களில் உங்களின் பாட்டி போன்றோரிடம் கேட்டு பாருங்கள். குழந்தைகளுக்கு எத்தனை வருடங்கள் தாய்ப்பால் கொடுத்தார்கள் என்று.. அதனால் தான் இன்றும் உங்களின் தந்தையோ, தந்தையின் உடன் பிறந்தாரோ நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். இயற்கையாக அவர்கள் செய்த வேலை, உண்ட உணவு ஒருபுறம் இருந்தாலும் முதற்புள்ளியான தாய்ப்பால் முக்கியம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

சில பெண்களுக்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது போல, கணவருக்கு கொடுக்கலாமா? என்ற சந்தேகமும் இருக்கும். கட்டாயம் கணவருக்கும் கொடுக்கலாம். குழந்தைக்கு கொடுத்த தாய்ப்பால் போக மீதமுள்ளது என்பதை உறுதி செய்துகொள்ளும் பட்சத்தில் கணவருக்கும் தாய்ப்பால் வழங்கலாம். காய்ச்சல் போன்று யாரோ ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பின் தாய்ப்பால் வழங்கலை தவிர்ப்பது நல்லது. சந்தேகம் இருந்தால் மருத்துவரை நாடியும் ஆலோசனை பெறலாம்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Breast Feeding Issues and Solution If What to do if milk builds up in the breast