பாலூட்டும் தாய்மார்களுக்கு வரப்பிரசாதமாக சின்ன வெங்காயம்.. லேகியம் செய்து உடல் நலத்தை அதிகரிப்பது எப்படி?..! - Seithipunal
Seithipunal


குழந்தையை பிரசவித்த பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் நன்மை செய்யும் சின்ன வெங்காயத்தின் நன்மைகள் மற்றும் அதனை வைத்து லேகியம் செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம்.

நாட்டு வெங்காயம் என்று அழைக்கப்படும் சிறு வெங்காயத்தை நமது உணவுகளில் கட்டாயம் சேர்த்துக்கொள்வது நல்லது. சின்ன வெங்காயம், சிறிய வெங்காயம், நாட்டு வெங்காயம், உள்ளி என்று பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது. இன்றுள்ள காலங்களில் பெரிய வெங்காயம் எனப்படும் பல்லாரியை உணவில் சேர்ப்பது அதிகரித்து வருகிறது. வேலை குறைவு, விரைந்து உணவுகளை செய்யலாம் என்ற காரணத்தால் பலரும் அதனையே விரும்புகிறார்கள். இருப்பினும், காரக்குழம்பு, இறைச்சி உணவுகளில் நாட்டு வெங்காயம் அதிகளவில் சேர்க்கப்படுகிறது. 

நாட்டு வெங்காயம் உணவுகளுக்கு சுவையை வழங்குவது மட்டுமல்லாது, பல்லூட்டும் பெண்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கிறது. தாய்ப்பாலை அதிகரிக்க வைக்கும் சக்தி கொண்ட உணவு பொருளாக சின்ன வெங்காயம் இருக்கிறது. குழந்தையை பிரசவித்த பெண்களின் கருப்பை சுருங்கி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான மருத்துவ குணங்கள் சின்ன வெங்காயத்தில் உள்ளது. 

சுகப்பிரசவம் வாயிலாக பெண்கள் குழந்தையை பிரசவிக்கும் போது பிறப்புறுப்பின் சுவர்பகுதி பலவீனம் ஆகிறது. இதனை பலப்படுத்தி இயல்புநிலைக்கு கொண்டு செல்ல சிறிய வெங்காயம் பெரும் உதவி செய்கிறது. கர்ப்பிணி பெண்களும் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. தம்பதிகளை பொறுத்த வரையில் தாம்பத்தியத்தில் அதிக ஆர்வத்துடன் இணைய தேவைப்படும் கூடுதல் சக்தியையும் வழங்குகிறது. 

தாய்மையடைய விரும்பும் பெண்கள், கற்பனினி பெண்கள், பிரசவித்த பெண்கள் என அனைவரும் சின்ன வெங்காயத்தை அதிகம் உணவுப்பொருளில் சேர்க்கலாம். ஆண்மையை அதிகரிக்க விரும்பும் ஆண்களும் சின்ன வெங்காயத்தை சாப்பிடலாம். இது, உடலில் உள்ள செல்களை புதுப்பித்து, இளமையை தக்க வைக்க உதவி செய்கிறது. இதுமட்டுமல்லாது, வயிற்றை சுத்தம் செய்யும் ஆற்றலையும் கொண்டுள்ளது. 

வயிற்று பிரச்சனைகளை சரி செய்து, பசியை ஏற்படுத்தி ஜீரணத்தன்மையை ஊக்குவிக்கிறது. குடலில் ஏற்படும் பருக்கள் மற்றும் வீக்கம், காயம் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. சின்ன வெங்காயத்தில் உள்ள கரையும் நார்சத்து, உடலுக்கு தேவையான அல்லிசின் என்ற சல்ஃபைட்டை கொண்டுள்ளது. 

இது கொழுப்பை கரைக்கும் தன்மையை பெற்றது. வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கவும் உதவி செய்கிறது. மேலும், இரத்த புற்றுநோய், சரும புற்றுநோய், மார்பக புற்றுநோயையும் குணப்படுத்துகிறது. சின்ன வெங்காயத்தை பய்னபடுத்தி லேகியம் செய்தும் சாப்பிடலாம். இதனால் உடலுக்கு கூடுதல் சக்தி கிடைக்கிறது. 

சின்ன வெங்காய லேகியம் செய்முறை : 

300 கிராம் அளவுள்ள சின்ன வெங்காயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். பூண்டை இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டையும் 500 கிராம் அளவுள்ள தேங்காய் பாலில் நன்றாக வேகவைத்து குழைக்க வேண்டும். 

இந்த கலவையுடன் 180 கிராம் அளவுள்ள வெள்ளத்தினை சேர்த்து 5 நிமிடம் கிளறி வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில், வறுத்து தூளாக்கிய வெந்தயம் மற்றும் சீரகத்தை சேர்த்து, சிட்டிகை அளவு சுக்கு தூள் மற்றும் ஏலக்காய் சேர்த்து, அனைத்தையும் 5 நிமிடம் வரை வேகவைக்க வேண்டும். பின்னர், ஒரு கரண்டி நெய் ஊற்றி இறக்கினால் வெங்காய லேகியம் தயார். ஒருமுறை செய்த லேகியத்தை 3 நாட்கள் வரை பாட்டிலில் அடைத்து சாப்பிடலாம்.. 

இந்த கலவையுடன் தண்ணீர் மற்றும் தேன் போன்றவை சேர்த்து சாப்பிட கூடாது. இது தம்பதிகளின் உடலுக்கு நல்ல சக்தியை வழங்கும். மேற்கூறிய பல நன்மைகளையும் தரும்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits of Chinna Vengayam or Small Red Onions Eating to Use Breast Feeding and Others Tips


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->