யூடியூப்பர்களே உஷார்...இனி இந்த தப்ப பண்ணிடாதிங்க...! - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூபில் பலர் அவர்களுக்கென தனியாக யூடியூப் சேனல்கள் தொடங்கி தங்கள் கருத்துக்களை சமூகத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சிலர் அரசுக்கு எதிராகவும், நாட்டை சீர்குலைக்கும் வகையிலும் சர்ச்சை கருத்துக்களை தங்களது சேனல்களில் பதிவிட்டு வருவதால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல், போலியான செய்திகளையும் வெளியிட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பமும் ஏற்படுகிறது.

இதை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நூற்றுக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டது ஆகும். 

ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில்  மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் இந்திய அரசின் அதிகாரத்திற்கு எதிராக தவறான செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்களை முடக்கி, யூடியூப்பர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youtube channel publish on fake news


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->