பஞ்சாப்பில் பயங்கரம்; காதலித்த பெண்ணுக்கு வேறொருடன் திருமணம் நிச்சயம்; இளம்பெண் 34 முறை கத்தியால் குத்தி கொலை..! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவைச் சேர்ந்த 29 வயதான டிம்பிள் என்ற பெண் மொகாலியில் உள்ள சரக்கு போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அதே நிறு​வனத்​தில் பணி​யாற்​றிய ஹரிந்​தர் சிங் மானும், டிம்​பிளும் மூன்று ஆண்​டு​களாக காதலித்து வந்துள்ளனர். 

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட்டுள்ளது. இதனால், டிம்பிளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதையறிந்து ஆத்திரம் அடைந்த ஹரிந்தர் சிங், மொகாலி அலு​வல​கத்​தில் டிம்​பிள் பணி​யாற்​றிக் கொண்டிருந்​த​போது அவரது அறைக்​குள் நுழைந்து,  கத்​தியால் அவரை சரமாரி​யாக குத்​தியுள்ளார். அத்துடன், ஹரிந்​தர் தனது கழுத்​தில் கத்​தி​யால் 10 முறை குத்தி தற்​கொலைக்கும் முயன்றுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் டிம்பிள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவருடைய உடலில் 34 இடங்களில் கத்திக் குத்துகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஹரிந்​தர் சிங் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young woman in Punjab stabbed to death 34 times after her marriage to another man was arranged


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->