சாப்பாடு கேட்டு வந்த 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - வாலிபரை சிறையில் அடைத்த போலீசார் - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் சாப்பாடு கேட்டு வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள ஷக்கர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருபவர் 13 வயது சிறுமி. இவர் வீடு வீடாக சென்று தனது குடும்பத்தினருடன் உணவு வாங்கி சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை சிறுமி வீடு வீடாக சென்று உணவு வாங்கியுள்ளார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த ரவீந்தர் என்பவரது வீட்டிற்கும் சென்ற சிறுமி வெளியே நின்று உணவு கேட்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டிலிருந்து ரவீந்தர், வீட்டிற்குப் பின்புறம் உள்ள மாட்டுக்கு கொட்டகைக்கு வந்தால் உணவு வழங்குவதாக கூறியுள்ளார். இதனால் சிறுமி வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகைக்கு சென்றுள்ளார். அப்பொழுது சிறுமியை ரவிந்தர் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரவீந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man who raped the girl who came for food was imprisoned in Telangana


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->