19 செல்போன் திருடி பப்ஜி விளையாட்டு.. சிறுவர்கள் பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள இளம் வயதுள்ள நபர்கள் முதல் பெரிய நபர்கள் வரை பப்ஜி கேம் விளையாடி வருகின்றனர். தங்களை மறந்து, தொண்டையினை சப்தமாக திறந்து, அதோ வருகிறான், இதோ வருகிறான், அவனை போட்டுத்தள்ளு என்று கூறி தங்களின் உடல்நலனை கெடுக்கும் விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளனர். 

இதனால் பலரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் பல குற்றச்சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்த சூழலில் பப்ஜி விளையாட 19 அலைபேசியை இரண்டு சிறுவர்கள் திருடியது தெரியவந்துள்ளது. 

டெல்லியில் உள்ள அலைபேசி கடையில் கடையினை உடைத்து ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் அலைபேசிகள், லூடோ விளையாட்டு விளையாடும் போர்டுகள் போன்றவை மர்ம நபர்களால் எடுத்து செல்லப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

காவல் துறையினர் சிசிடிவி கேமிராக்களை சோதனை செய்த சமயத்தில், சிறுவர்கள் அனைத்தையும் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுவர்களை கைது செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பப்ஜி கேம் விளையாட உயர் ரக அலைபேசியை திருடியது தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young age person theft mobile to play pubg


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->