முகமூடியுடன் நூறு பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்த மல்யுத்த வீரர் கைது.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் இளம் யோகா ஆசிரியை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் அவர் தெரிவித்ததாவது, "முகமூடி அணிந்த ஒருவர் தன்னிடம் உடல் ரீதியாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில், போலீசார் முகமமூடி நபரை கண்டுபிடிப்பதற்கு, நான்கு கண்காணிப்பு படைகளை அமைத்தனர். அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள கேமராக்கள், வணிக வளாகங்கள், கடைகள், குடியிருப்பு வீடுகள் மற்றும் பிற பொது இடங்களை போலீசார் ஆய்வு செய்தனர். 

அப்போது, சந்தேகபடும்படியாக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். அதன் படி, முகமூடி அணிந்த நபர் பிரபல மல்யுத்த வீரர் கவுஷல் பிபாலியா என்பது தெரியவந்தது.

மாநில அளவில் கடந்த 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 74 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இதையடுத்து போலீசார் நேற்று கவுஷல் பிபாலியாவை கைது செய்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் முகமூடி அணிந்து 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, "100 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததை பிபாலியா ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் அவமானத்தால் யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wrestler arrested for hundrad womans sexuall harassment case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->