உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்காக சிறப்பு ரயில்கள்! இந்திய ரயில்வே அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. 

குஜராத், அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. 

இதனை பார்ப்பதற்காக ரசிகர்கள் ரூ. 20,000 முதல் 40 ஆயிரம் வரை செலவழித்து விமானத்தில் வருவதை தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. 

டெல்லியில் இருந்து இன்று மாலை புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை அகமதாபாத் வந்து சேரும் இறுதி போட்டி முடிந்தவுடன் திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து டெல்லி புறப்படும். 

இதுபோல் மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு இன்று மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில் ரூ.  620 முதல் 1665 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

தற்போது நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்தியா எந்த ஆட்டத்திலும் தோல்வி அடையாமல் வெற்றியை மட்டுமே பெற்றுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 8வது முறையாக உலக கோப்பை இறுதிப்போட்டியில் பங்கிருக்கிறது. 

இந்த 2 அணிகளுக்கும் இடையே ஆன போட்டி மிக கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Cup Final Special Trains Indian Railways


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->