வேலை முக்கியமல்ல கர்ப்பிணி மனைவியை பார்ப்பதே முக்கியம்...! ரூ. 1.2 கோடி சம்பள வேலையை உதறிய இளைஞர்...! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது ரூ.1.2 கோடி (வருடத்திற்கு) ஊதிய வேலையை கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள ராஜினாமா செய்துள்ளார்.இச்சம்பவம் இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

வேலை செய்து வந்த இளைஞர் ஒருவர் Reddit இல் பகிர்ந்த பதிவில் குறிப்பிட்டிருந்ததாவது , "நான் WHF (WORK FROM HOME) முறையில் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி ஊதியம் பெற்று வந்தேன். அண்மையில் என் மனைவி கர்ப்பம் தரித்தார். இதைத்தொடர்ந்து முதலில் அவளை வேலையை விட சொன்னேன்.

இருப்பினும், மனைவி தொடர்ந்து வேலை செய்ய விரும்பியதால் மனைவியை கவனித்துக்கொள்ள நான் வேலையை ராஜினாமா செய்தேன்.மேலும், வீட்டிலிருந்து மனைவியை கவனித்துக்கொள்ள இருக்கிறேன்.

உங்கள் குடும்பத்தினருக்கு தேவைப்படும் போது நீங்கள் அவர்களுடன் இருப்பதை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை" என்று பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக அந்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Work not important what important looking after pregnant wife young man who turned down job worth Rs 1point2 crore


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->