பெண்கள், திருநங்கைகளுக்கு இலவச பயணம் - தெலங்கானா அரசு அசத்தல் திட்டம்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதை தொடர்ந்து, மாநிலத்தின் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.

இந்த நிலையில், தெலுங்கானாவில் அனைத்து வயது பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் இலவச பேருந்து பயணத்தை தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் கீழ் மாநில எல்லைகளுக்குள் இயக்கப்படும் பல்லே வெலுகு மற்றும் விரைவு பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணிக்கலாம்.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து பெண்களும், மூன்றாம் பாலினத்தவரும் வயது வித்தியாசம் இன்றி, இந்த திட்டத்தில் பயன் பெறலாம். தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே இந்த சேவையைப் பெற தகுதியுடையவர்கள். 

இலவச பயணம் மேற்கொள்ள விரும்பும் பெண்கள், தங்களுடைய வசிப்பிட முகவரியை உறுதிப்படுத்தும் வகையிலான அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு 'ஜீரோ டிக்கெட்' வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

womens and transgender free travel in telangana bus


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->