தீராத வயிற்று வலி - இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!
women sucide for stomach pain in karnataga
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு அருகே வீரகவுடனஉண்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சித்தராஜு - வினோதா தம்பதியினர். இதில் வினோதா கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட வினோதா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வினோதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வினோதா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
women sucide for stomach pain in karnataga