அதிகரிக்கும் அமீபா காய்ச்சல் பலி எண்ணிக்கை - கேரளாவில் மேலும் ஒரு பெண் பலி.!!
women died for amoeba fever in kerala
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமீபா மூளைக்காய்ச்சல் அதிகளவு பரவி வருகிறது. இந்த காய்ச்சல் பாதிப்பால் கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி பகுதியை சோ்ந்த 9 வயது சிறுமி, 3 மாத குழந்தை உள்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கடும் காய்ச்சல் மற்றும் உடல் வலியால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், உடல்நலம் சரியாகாததால் கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பெண்ணின் உடலில் இருந்து மாதிரி சேகரித்து பரிசோதனை செய்ததில், அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதனால் அமீபா மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, உயிரிழந்த பெண் வீட்டில் உள்ள கிணறு, அருகே உள்ள குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து மாதிரி சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரைக்கும் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்து 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
English Summary
women died for amoeba fever in kerala