30 ரூபாய் லிப்ஸ்டிக்கால் விவாகரத்து கேட்ட மனைவி - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது கணவரிடம் பத்து ரூபாய் லிப்ஸ்டிக்கை வாங்கி வரும்படி கூறியுள்ளார். அதன் படி கடைக்குச் சென்ற கணவர் பல கடைகளில் தேடியும் ரூ.10 மதிப்புள்ள லிப்ஸ்டிக் கிடைக்கவில்லை. எனவே ரூ.10 லிப்ஸ்டிக்கு பதிலாக ரூ.30 மதிப்புள்ள லிப்ஸ்டிக்கை வாங்கி வந்து தன் மனைவியிடம் கொடுத்துள்ளார். 

இதையறிந்த அந்த பெண் தான் கேட்டது 10 ரூபாய் லிப்ஸ்டிக் தான்.. ஏன் 30 ரூபாய் லிப்ஸ்டிக்கை வாங்கி வந்தீர்கள் என்று கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கோபித்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர், கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், கணவருக்கு சேமிக்கும் பழக்கம் இல்லை. பணம் குறித்த அக்கறை இல்லை. அதனால் விவாகரத்து கோருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் கவுன்சிலிங்கிற்கு செல்லும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman send divorce notice to husband for buy 30 rs lipstick in uttar pradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->