சிறுத்தை தாக்கி பெண் பலி... கிராம மக்கள் அச்சம்!
Woman killed by leopard Villagers in fear
புதருக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை தாக்கியதில் பெண்சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.சிறுத்தையை பொறி வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தரபிரதேசம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள சப்தல்பூர் தேலி கிராமத்தை சேர்ந்த சமீனா என்பவர் அருகிலுள்ள காட்டிற்கு தீவனம் சேகரிக்கச் சென்றுள்ளார்.அப்போது யாரும் எதிர் பாரத நிலையில் புதருக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று அவர் மீது பாய்ந்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வெகு நேரம் ஆகியும் சமீனா வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றபோது காட்டில் அவரின் சடலத்தை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து சிறுத்தையை பொறி வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Woman killed by leopard Villagers in fear