விவாகரத்தை ரத்து செய்யக்கோரி பெண் மனு; கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


என் கணவரை நான் இன்னும் காதலிக்கிறேன். கணவருடன் வழங்கப்பட்ட விவாகரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்த நபருக்கு கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த  தம்பதிக்கு  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த  2014 டிசம்பர் முதல் தம்பதி பிரிந்து வாழ்ந்துள்ளனர். இதையடுத்து விவாகரத்து வழங்கக்கோரி கணவர் புனே கோர்ட்டில் 2015ம் ஆண்டு வழக்கு தொடர்ந்து  விவாகரத்து வழங்கியது.

இந்நிலையில், விவாகரத்து வழங்கப்பட்டதை எதிர்த்து அப்பெண் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த  மனுவில், என் கணவரை நான் இன்னும் காதலிக்கிறேன். கணவருடன் வழங்கப்பட்ட விவாகரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மும்பை ஐகோர்ட்டு, மனுதாரரின் முன்னாள் கணவரின் வாதத்தை கேட்டது. அதில், தனது முன்னாள் மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த வரவில்லை என்றும், உடல் ரீதியிலான உறவுக்கு மறுத்தார், எனது நண்பர்கள், சக ஊழியர்கள் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தினார்.ஆகையால், அவருடன் சேர்ந்துவாழ எனக்கு விரும்பமில்லை. விவாகரத்தை ரத்து செய்யக்கூடாது என்று மனு தாக்கல் செய்த பெண்ணின் முன்னாள் கணவர் கோர்ட்டில் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கணவர் தாக்கல் செய்த மனுவில் விவாகரத்து வழங்கி மாவட்ட கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, விவாகரத்தை ரத்து செய்யக்கோரி பெண் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman files petition to annul marriage Courts shocking verdict


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->